எங்களைப் பற்றி

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் வலைத்தளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

ஓம் குஹப்ரஹ்மணே நம:
 
ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
 
எல்லாரு நல்லகதி யெய்தவென்று மாமறைகள்
சொல்வதுபோ னானுமிங்கே சொன்னேன் குருபரனே
          – பாம்பன் சுவாமிகள்
 
அத்தியாச்சிரம சுத்தாத்துவைத வைதிக சைவசித்தாந்த ஞானபானு பாம்பன்  ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள், மயிலூரும் இறைதாள் எல்லாரும் இறைஞ்சி எல்லா நலமும் பெற வேண்டும் என்னும் பெரும் நோக்கிலும், உலக நன்மைக்காகவும் 6666 ஞான திருப்பாடல்களையும், நன்னெறி விளக்கும் உரைநூல்களையும் அருளிச் செய்துள்ளார்கள். பத்திச் சுவை சொட்டச் சொட்ட முருகவேள் ஒருவனையே பாடிய இந்த ஞானப் பாடல்களையும், உரைநடை நூல்களையும் உலகெங்கும் உள்ள முருகனடியார்களும் பாம்பனடியார்களும் ஆன்மநேய ஒருமைப்பாட்டாளர்களும், தமிழ் அறிஞர் பெருமக்களும் படித்துப் பயனடையும் பொருட்டு, இவ்வலைத்தளத்தில் PDF வடிவில் பதிவிட்டு உள்ளோம். அடியார் பெருமக்கள் இந்நூல்களைப் படித்துக் கொள்ளவும், பதிவிறக்கம் செய்து, நூல்களாக அச்சிட்டுக் கொள்ளவும் ஏற்ற வகையில் வடிவமைத்து உள்ளோம். இந்நூல்களின் தட்டச்சுப் பணிகளை மேற்பார்வை செய்தும், எழுத்துப் பிழைகளைத் திருத்தம் செய்தும் உதவிய  திருவான்மியூரைச் சேர்ந்த பாம்பனடியார்  திரு‌. மருதநாயகம் ஐயா அவர்களுக்கும்,  தட்டச்சுச் செய்தளித்த அலமு அச்சக (இராயப்பேட்டை, சென்னை – 14) நிறுவனத்தினர்களுக்கும் நன்றி கூறி இவ்வலைத்தளத்தில் இந்த ஞான கருவூலங்களைப் பதிவிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 
அன்பன்,
பாம்பனடியார் பா. வெங்கட்டராமன்,
9790713321